மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

திட்டச்சேரியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய குழி வெட்டியவருக்கு இந்த துயரம் நேர்ந்தது.

Update: 2022-11-18 18:45 GMT

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய குழி வெட்டியவருக்கு இந்த துயரம் நேர்ந்தது.

மின்சாரம் தாக்கியது

நாகை மாவட்டம் திட்டச்சேரி வாணியத்தெருவை சேர்ந்தவர் முகமது சாகுல் ஹமீது(வயது 38). கூலித்தொழிலாளியான இவர், திட்டச்சேரியில் இறந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்ய இரவில் பள்ளிவாசலுக்கு சொந்தமான மையாத்தான் கொல்லையில் குழி வெட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அருகில் வெளிச்சத்திற்காக வைக்கப்பட்ட மின்விளக்கின் வயரை சாகுல் ஹமீது, தெரியாமல் மிதித்து விட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

பரிதாப சாவு

அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அங்கு முகமது சாகுல் ஹமீதுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார், முகமது சாகுல் ஹமீதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி வெட்ட சென்றவர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்