மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி படுகாயம்

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

Update: 2023-03-15 18:21 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 43), தொழிலாளி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கீரமங்கலம் சென்று கொண்டு இருந்தார். அப்போது கொடிக்கரம்பை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டாண்டு ரோட்டில் குத்தியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராமலிங்கத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்