கள்ளக்காதலி வீட்டில் தொழிலாளி பிணம்

கள்ளக்காதலி வீட்டில் தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-12-11 19:09 GMT

சாத்தூர், 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா முள்ளிச்செவலை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 50). பூ கட்டும் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(48). இந்தநிலையில் சக்திவேலுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே 15 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சக்திவேல் சில நாட்கள் அந்த பெண் வீட்டிலும், சில நாட்கள் முத்துலட்சுமி வீட்டிலும் இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் சக்திவேலுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனையில் சக்திவேல் இருந்துள்ளார். இந்தநிலையில், அந்த பெண்ணின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் பிணம் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டு்ள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்