மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 52). கூலி தொழிலாளி. இவரும் அதே ஊரைச் சேர்ந்த 6 கூலி தொழிலாளர்களும் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த சங்கிலி என்பவரது தோட்டத்து கிணற்றில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
கிணற்றில் மின் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றிவிட்டு கிணறு தோண்டும் பணி மேற்கொள்ள மின் மோட்டாரை மகாலிங்கம் இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் போலீசார் மகாலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.