கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2023-02-18 12:14 GMT

வாலாஜா

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

காட்பாடியை அடுத்த வடுகன்தாங்கல் கிராம சாவடி தெருவை சேர்ந்த கோபால் (வயது 53). வாலாஜாவை அடுத்த செங்காடு கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார் பின்னர் அந்த ஊரில் உள்ள தனியார் விவசாய நிலம் வழியாக சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு முட்புதர்கள் சூழ்நற்த இடத்தில் தரைமட்ட கிணறு இருந்ததை அடையாளம் காண முடியாமல் தவறி விழுந்து விட்டார். தண்ணீரில் தத்தளித்த அவர் நீரில் மூழ்கி இறந்து விட்டார்.

ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு வாலாஜா போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்