மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள செட்டிசிமிழியை சேர்ந்த உலகநாதன் மகன் யுவராஜ் (வயது20). கட்டிட தொழிலாளி. இவரும், இவரது நண்பர் அரவிந்த் (22) என்பவரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார்ைசக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அரவிந்த் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். யுவராஜ் பின்னால் அமர்ந்து இருந்தார். அப்போது கொரடாச்சேரி அருகே ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த யுவராஜ் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த யுவராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து யுவராஜின் தந்தை உலகநாதன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.