விஷம் குடித்து தொழிலாளி சாவு

சிவகிரி அருகே விஷம் குடித்து தொழிலாளி இறந்தார்.

Update: 2023-07-21 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே ராயகிரி பேரூராட்சி மேல கரிசல்குளம் கிராமம் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி மகன் சின்னப்பராஜ் (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி திரேஷ் மேரி (37) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக கணவன்- மனைவி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் சின்னப்பராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டை விட்டு மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் சின்னப்பராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்றார். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்