விஷம் குடித்து தொழிலாளி சாவு
புதுப்பேட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே மேல் காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து(வயது 45). தொழிலாளி இவர் பல நாட்களாக வேலை கிடைக்காததால் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து வீரமுத்து குடித்துவிட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வீரமுத்து மனைவி ராதா கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.