மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மெலட்டூர் அருகே உள்ள ஏர்வாடி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் குமாரசாமி(வயது40). தொழிலாளி. நேற்று இரவு இவர் மோட்டார்சைக்கிளில் அன்னப்பன்பேட்டையில் இருந்து மெலட்டூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது நரியனூர் அருகே வந்தபோது எதிரே மெலட்டூரில் இருந்து நரியனூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குமாரசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குமாரசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி் வருகின்றனர். மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.