ஸ்கூட்டர் கவிழ்ந்து தொழிலாளி சாவு

ஊத்தங்கரை அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்து தொழிலாளி இறந்தார்.

Update: 2023-05-17 18:45 GMT

ஊத்தங்கரை

ஊத்தங்கரை தாலுகா அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செவத்தியான் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15-ந் தேதி ஸ்கூட்டரில் ஊத்தங்கரை- திருப்பத்தூர் சாலையில் பஸ் டெப்போ அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செவத்தியானை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊததங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்