மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில தொழிலாளி சாவு

கல்லாவி அருகே மோட்டார் சைக்கிள் மோதி வடமாநில தொழிலாளி இறந்தார்.;

Update:2022-07-30 22:57 IST

ஊத்தங்கரை

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் கோட் (வயது 55). இவர் கல்லாவி அருகே ஓலப்பட்டி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 28-ந் தேதி இரவு சிப்காட் அருகில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் சந்திரகுமார் கோட் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்திரகுமார் கோட் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்