கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 41). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உதயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.