தொழிலாளி வெட்டி கொலை; 2 பேர் கைது

தாம்பரம் அருகே தொழிலாளியை வெட்டி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-07-13 20:13 IST

தாம்பரத்தை அடுத்த பல்லாவரம், பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி (வயது 24). பொழிச்சலூர், விநாயகா நகரை சேர்ந்தவர் பாண்டியன் (45). இவர்கள் 2 பேரும் பம்மல், நாகல்கேணியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு, பாண்டியன், சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று, அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி, ஆபாசமாக பேசி உள்ளார். இதையறிந்த சிரஞ்சீவி, நேற்று முன்தினம் இரவு, அவருடைய நண்பர் ஹரிகரன் (26), என்பவருடன் மது போதையில் பாண்டியன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பாண்டியனின் இடது பக்க விலா மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த பாண்டியனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி, பாண்டியன் இறந்தார்.

இதற்கிடையில், தப்பியோடிய சிரஞ்சீவியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஹரிகரனையும், கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்