சேலம் மணியனூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் மணியனூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர் திருவேங்கட நகர் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 53), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வண்டியில் இருந்து கீழே விழுந்ததில் கை முறிந்து விட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மன உளைச்சலுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய மனைவி மற்றும் மகன் அருள் சஞ்சய் ஆகியோர் ஆத்தூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த பாலாஜி, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.