தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தட்டார்மடம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2022-12-21 00:15 IST

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள எம்மாகிழவிவிளையைச் சேர்ந்த சுந்தரபாண்டி மகன் தனபாலன் (37). தொழிலாளி. இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதை மனைவி கண்டித்து வந்துள்ளார். சம்பவத்தன்றும் அவர் மதுகுடித்து விட்டு வந்து மனைவியுடன் அவர் தகராறு செய்துள்ளார். இதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த அவர் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி காமாட்சி அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பென்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்