கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-16 16:37 GMT

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50). தொழிலாளியான இவர் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த சண்முகம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சண்முகம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்