விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை கொண்டார்.

Update: 2023-05-19 20:20 GMT

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மன்னார் சமுத்திரம் படுகை சாலை தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது45).விவசாய தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி ஏற்பட்டதால் பாலமுருகன் வாழை தோப்பில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாலமுருகன் மனைவி முத்துமணி, திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்