விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விழுப்புரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2022-11-28 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் விஜி (வயது 29). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். சம்பவத்தன்று விஜி அதே கிராமத்தில் உள்ள ரெயில்வே பாலம் அருகில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக்கிடந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி விஜி பரிதாபமாக இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்