தொழிலாளி தீக்குளித்து சாவு
திசையன்விளையில் தொழிலாளி தீக்குளித்து இறந்தார்.;
திசையன்விளை:
திசையன்விளை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மந்திர மகராஜன் (வயது 36), தச்சு தொழிலாளி. இவர் அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி மது குடிக்க பணம் கேட்டு மனைவி பாமாவிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மந்திர மகராஜன், வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மந்திர மகராஜன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாமா கொடுத்த புகாரின் பேரில், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.