கோவில் திருவிழாவை சரியாக நடத்தவில்லை என்று கூறிஊர் நாட்டாமையை தாக்கிய தொழிலாளி கைது

கோவில் திருவிழாவை சரியாக நடத்தவில்லை என்று கூறி ஊர் நாட்டாமையை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-03 19:49 GMT

புதுச்சத்திரம், 

கடலூர் அருகே உள்ள பெத்தாங்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 42). இவர் ஊர் நாட்டாமையாக உள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி பன்னீர்செல்வம் (42) என்பவர், வெங்கடேசனிடம் வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவர் மாரியம்மன் கோவில் திருவிழாவை ஏன் சரியாக நடத்தவில்லை என்று கூறி வெங்கடேசனை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்