கந்தம்பாளையம் அருகே கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய தொழிலாளி கைது

கந்தம்பாளையம் அருகே கல்குவாரி உரிமையாளரை மிரட்டிய தொழிலாளி கைது

Update: 2022-06-01 16:32 GMT

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள கூடச்சேரி மூர்த்திபட்டியில் சசிகுமார் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த குவாரியில் ஓமலூர் அறியாம்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (45) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சசிக்குமாருக்கும், வெங்டேசுக்கும் வரவு செலவு கணக்கு தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் குவாரி உரிமையாளர் சசிகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்