ரெயில் தண்டவாளத்தில் தொழிலாளி பிணம்

மொரப்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

Update: 2022-09-05 16:24 GMT

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள மடதஅள்ளியை சேர்ந்தவர் சுகுவாணன் (வயது 30). தொழிலாளி. இவர் நேற்று காலைபெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இதனிடையே மொரப்பூர் அருகே தொங்கனூர் ரெயில் நிலையம் அருகே சுகுவாணன் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுகுவாணன் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என ரெயில்வே போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்