காரைக்குடியில் ரூ.8½ கோடியில் தினசரி மார்க்கெட் அமைக்க பணிகள் தொடக்கம்
காரைக்குடியில் ரூ.8½ கோடி மதிப்பில் தினசரி மார்க்கெட் அமைக்க முதற்கட்ட கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளை நகராட்சி தலைவர் முத்துத்துரை நேரில் ஆய்வு செய்தார்.
காரைக்குடி
காரைக்குடியில் ரூ.8½ கோடி மதிப்பில் தினசரி மார்க்கெட் அமைக்க முதற்கட்ட கட்டிட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணிகளை நகராட்சி தலைவர் முத்துத்துரை நேரில் ஆய்வு செய்தார்.
தினசரி மாா்க்கெட்
காரைக்குடி கழனிவாசல்-வாட்டர் டேங்க் சாலையில் வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. அந்த வாரச்சந்தை அருகில் தினசரி மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் குறித்து நகர்மன்ற தலைவர் முத்துத்துரை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
ரூ.7 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய தினசரி மார்க்கெட் இங்கு அமைக்கும் பணி தொடங்க உள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிதாக அமைய உள்ள தினசரி மார்க்கெட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய, விற்பனைக்கூடங்கள், சுகாதார வளாகம், குடிநீர் மற்றும் மின் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றுக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மின்மயானம்
இதனால் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். ேமலும் இதற்கு சற்று தொலைவில் ரூ.1½ கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த மயானம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சில பணிகளை குறிப்பிட்டு கூடுதல் வசதிகளோடு தரமானதாக இருக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடமும் ஒப்பந்ததாரர்களிடமும் அறிவுறுத்தினார்.