மகளிர் உரிமைத்தொகை - இணையதள சேவை பாதிப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப நிலையை அறிவதற்கான இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;

Update:2023-09-19 12:20 IST
மகளிர் உரிமைத்தொகை - இணையதள சேவை பாதிப்பு

சென்னை,

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் நோக்கம், அரசாணை, தகுதிகள், விண்ணப்பத்தின் நிலை என பல்வேறு தகவல்களை பொது மக்கள் எளிதாக அறியும் வகையில் தமிழ்நாடு அரசு https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளது.

ஆதாரில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் கடவு எண் வரும். இதை உள்ளீடு செய்தால், விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணம் திரையில் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தை ஒரே சமயத்தில் பலரும் பயன்படுத்தியதால் சர்வர் முடங்கியது. இதனால், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப நிலையை அறிவதற்கான இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்