கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் தகுதியுடைய பெண்கள் அனைவரும் இடம் பெறும் வகையில் அதிகாரிகள் கவனமாக பணியாற்ற வேண்டும் என கூறினார்.கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நரேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளவிநாயகன் அமுல்ராஜ், உதவி கலெக்டர்கள் யுரேகா (மயிலாடுதுறை), அர்ச்சனா (சீர்காழி), மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.