பெண்கள் பால்குட ஊர்வலம்
கோவில்பட்டியில் காவல் விநாயகர் கோவில் வருசாபிஷேகவிழாவை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய வளாகத்திலுள்ள காவல் விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நேற்று
நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 6 மணி அளவில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், கோபுர கலசங்களுக்கு புனிதநீர் விடுதல் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இவ்விழாவில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து கடலையூர் ரோடு, பழனியாண்டவர் கோவில் ரோடு, எட்டையாபுரம் ரோடு, புது ரோடு வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.