புதிய பயனாளிகளுக்கு 'மகளிர் உரிமைத் தொகை' - முதல்-அமைச்சர் நாளை வழங்குகிறார்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைந்துள்ளனர்.

Update: 2023-11-09 16:44 GMT

சென்னை,

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைந்துள்ளனர். இந்த புதிய பயனாளிகளுக்கு நாளை மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் நாளை காலை நடைபெறும் விழாவில் புதிய பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகையை வழங்க உள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்