நன்னிலத்தில் மகளிர் தின விழா
வானவில் தொண்டு நிறுவனம் சார்பில் நன்னிலத்தில் மகளிர் தின விழா நடந்தது.
நன்னிலம்:
வானவில் தொண்டு நிறுவனம் சார்பில் நன்னிலத்தில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில் மற்றும் திருவாரூர் மாவட்ட நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஸ்வத் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் வானவில் தொண்டு நிறுவன தலைவர் தவசுராணி வரவேற்றார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் விஜி, கவிதா, நாபின்ஸ், மண்டல மேலாளர் சதீஷ்குமார், திருவாரூர் சமூகநலத்துறை பாதுகாப்பு துறை அலுவலர் அமுதா, வானவில் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதா நன்றி கூறினார். விழாவில் மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுய உதவிக்குழுவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.