மகளிர் தின விழா
வள்ளியூர் டி.டி.என். கல்வி குழுமங்கள் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றார்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் டி.டி.என். கல்விக்குழுமங்களான நேரு நர்சிங் கல்லூரி, ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி, மரியா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, நேரு மருத்துவமனை ஆகியவை சார்பில் மகளிர் தின விழா, மரியா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. டி.டி.என்.கல்வி குழுமங்களின் தாளாளர், செயலாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கினார். டி.டி.என். கல்வி குழுமங்களின் தலைவர் டி.லாரன்ஸ் வரவேற்று பேசினார். விழாவில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். அவர் பேசுகையில், ''திராவிட இயக்கங்களினால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பிடித்து சாதனை புரிந்து வருகிறது'' என்று கூறினார்.
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் சி.வி.மைதிலி சிறப்புரையாற்றினார். கோலப்போட்டி, மெகந்தி போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி, மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கி பாராட்டினார்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில், பெண்கள் வேலைக்கு செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகுகிறதா? குறைகிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பெருமாள், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், ஓய்வுபெற்ற வேளாண்மை துணை இயக்குனரும், டி.டி.என்.கல்வி குழும பொருளாளருமான ஸ்டேன்லி, கல்லூரி நிர்வாக அலுவலர் அலெக்சாண்டர், நேரு நர்சிங் கல்லூரி முதல்வர் எஸ்.மார்க்கரெட் ரஞ்சிதம், துணை முதல்வர் பேபி உமா, ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜி.சுரேஷ் தங்கராஜ் தாம்சன், நேரு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டியாவிலின் மெடோனா, அரசு வக்கீல் முத்துகிருஷ்ணன், கிங்க்ஸ் பள்ளிகளின் மக்கள் தொடர்பு அலுவலர் ரேகா முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். மரியா மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சி.ஆர்.கிளாடிஸ் லீமா ரோஸ் நன்றி கூறினார்.