மழை வேண்டி கும்மி அடித்து வழிபாடு நடத்திய பெண்கள்

கடையம் அருகே தோரணமலையில் மழை வேண்டி கும்மி அடித்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.

Update: 2023-08-11 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே மாதாபுரம் சோதனை சாவடியில் இருந்து மேற்கு நோக்கி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். சமீபத்தில் பருவமழை பொய்த்து விட்ட நிலையில் மழை செழித்து பெய்யவும், |விவசாயம் மேம்படவும் வேண்டி கடையம் மற்றும் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று பாதயாத்திரையாக தோரண மலைக்கு நடந்து வந்தனர். பின்னர் மழை வேண்டி கும்மி அடித்து வழிபாடு நடத்தினர். ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு வழக்கம்போல் வருண கலச பூஜை நடைபெற்றது. 21 கிரக குடத்தில் மலை மீது இருந்த சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அடிவாரத்தில் உள்ள விநாயகர் மற்றும் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை முதல் மதியம் வரை வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்