மேலப்பாவூர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் பெண் வெற்றி

மேலப்பாவூர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் பெண் வெற்றி பெற்றார்.

Update: 2022-07-12 16:09 GMT

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் மேலப்பாவூர் பஞ்சாயத்தில் காலியாக உள்ள 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 3 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து புதிய உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 9-ந் தேதி நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கை நேற்று யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. மொத்தம் 306 வாக்குகள் பதிவான நிலையில் நாச்சியார் என்பவர் 148 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி கண்ணன் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்