புவனகிரி அருகே பு.கொளக்குடியை சேர்ந்த பெண்கள் புவனகிரி-வடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சாலை வசதி, கூடுதல் பஸ் வசதி கேட்டு கோஷமிட்டனர். போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பெண்களை கலைந்துபோக செய்தனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.