பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

Update: 2023-07-30 17:30 GMT

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாமளா தேவி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மருதமுத்து, ஒன் ஸ்டெப் சென்டர் உறுப்பினர் ஷீபா ஆகியோர் குன்னம் அருகே ஒதியம் கிராமத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181, உமன் ஹெல்ப் டெஸ்க் 112, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும், முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 மற்றும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஒதியம் கிராம மக்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளுக்கு அடிமையாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும், வானிலை மாற்றத்தால் மழை வரும் நிலையில் இடி-மின்னல் சமயங்களில் மரத்தடியில் நிற்பதை முற்றிலும் தவிர்த்து விடுமாறும், ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பெண் பிள்ளைகளுக்கு மன வலிமையை உண்டாக்கும் வகையிலும், அவர்களின் பிரச்சினைகளை தைரியமாக எதிர்த்து போராடும் வகையிலும் எடுத்து கூற வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தொடுதல் குறித்த விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்