பெண்கள் விளக்கு ஏற்றி ஊர்வலம்
திரவுபதி முர்மு வெற்றி: முத்தையாபுரத்தில் பெண்கள் விளக்கு ஏற்றி ஊர்வலம்
ஸ்பிக்நகர்:
ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு அபார வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் தூத்துக்குடி தெற்கு மண்டல பா.ஜனதா சார்பில் முத்தையாபுரத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பெண்கள் விளக்கு ஏற்றி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மகேஷ், பொருளாளர் முத்துராஜ், துணைத்தலைவர் பொய் சொல்லான், செயலாளர் சிவதான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியசீலன், ஓ.பி.சி. அணி மாநில துணைத்தலைவர் விவேகம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கேற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முத்து பெரியநாயகம், ஜெயராம், மாசாணம், முத்துகிருஷ்ணன், முருகேசன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன், அமைப்புசாரா மாவட்ட செயலாளர் சுரேஷ், மண்டல செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் பெருமாள்சுவாமி கோவில் அருகில் இருந்து ஊர்வலமாக சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் வந்தனர். அங்கு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் எஸ். செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சண்முகநாதன், ஒன்றிய விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு தலைவர் அச்சுதன், பொருளாளர் அகத்தீஸ்வரன், செயலர்கள் குமாரவேல், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* எட்டயபுரம் மண்டல பா.ஜ.க.வின் சார்பாக எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ் தலைமை தாங்கினார். எட்டயபுரம் மண்டல தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் நகர நிர்வாகிகள் நாகராஜ், பாலகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.