மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
திசையன்விளையில் மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
திசையன்விளை:
ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமையில் திசையன்விளை பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் திரளான மகளிர் கலந்து கொண்டனர்.