குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
கூடங்குளத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.;
கூடங்குளம்:
சாலை மறியல்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் வடக்கு பகுதி 2-வது வார்டு பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலை ராதாபுரம் மெயின் ரோட்டில் திடீரென காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் மற்றும் பஞ்சாயத்து தலைவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.