கியாஸ் சிலிண்டர்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கியாஸ் சிலிண்டர்களுடன் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-09-26 17:31 GMT

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கியாஸ் சிலிண்டர்களுடன் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் சித்ரா தலைமை தாங்கினார்.

உணவு தயாரிக்க பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டருக்கான தொகையை அரசு முழுமையாக தர வேண்டும். இல்லாவிட்டால் அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான சிலிண்டரை வருடத்துக்கு 4 சிலிண்டர்கள் என அரசே வழங்க வேண்டும். காலை உணவை சுய உதவிக்குழுக்களிடம் கொடுப்பதை தவிர்த்து அங்கன்வாடி மையத்தில் தயாரித்து வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் க.சித்ரா, முன்னாள் மாநில செயலாளர் பாக்கியம், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ், பனியன் சங்க செயலாளர் சம்பத் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்