மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள அரசு பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்யும் முகாம் நடந்தது. பாலக்கோடு தாசில்தார் ராஜா, பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் மற்றும் கவுன்சிலர்கள் சென்று முகாமை பார்வையிட்டனர். இதில் பெண்கள் ஆர்வத்துடன் வந்து உரிமைத்திட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர்.