குடும்பத்தகராறில் பெண் தீக்குளிப்பு

குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்தார்.

Update: 2023-04-08 18:23 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்தவர் மதுபாலன். இவருடைய மனைவி வசந்தவள்ளி (வயது 35). இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மனமுடைந்த வசந்தவள்ளி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்