பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

பீளமேட்டில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

Update: 2023-09-03 19:45 GMT


பீளமேடு

கோவை சவுரிபாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா (வயது 56). இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை செல்லும் தனது மகளை வழி அனுப்புவதற்காக பீளமேடு பஸ் நிறுத்தம் பகுதிக்கு ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் தனது மகளை வழி அனுப்பிவிட்டு, தனது ஸ்கூட்டரில் செல்ல முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் நிர்மலா கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். உடனே அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.

இதையடுத்து அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை பீளமேட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக நகைபறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்