சாய்பாபாகாலனி
கோவை கே.கே.புதூரை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவரது மனைவி சுபத்ரா (வயது 32). சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் கோவை பாரதிபார்க்கில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். பின்னர் அவர்கள் ஓட்டலை விட்டு வெளியே வந்து நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் சுபத்ரா அணிந்து இருந்த 5¼ பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுபத்ரா கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.