பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 68). இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.