பெண்ணாடத்தில் வாகனம் மோதி பெண் பலி
பெண்ணாடத்தில் வாகனம் மோதி பெண் உயிரிழந்தார்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் கிழக்கு வால் பட்டறையை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி முத்துலட்சுமி (வயது 65). இவர் நேற்று இரவு 7.30 மணிக்கு கடை வீதிக்கு சென்றுவிட்டு விருத்தாசலம் சாலையில் வீட்டுக்கு நடந்துசென்று கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், முத்துலட்சுமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இதுகுறித்து பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.