லாரி மோதி பெண் பலி

மந்தாரக்குப்பத்தில் லாரி மோதி பெண் உயிாிழந்தாா்.

Update: 2022-08-01 16:58 GMT

மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதிகேசவர் மனைவி காமாட்சி(வயது 50). இவர் தனது மகன் திருமலையுடன் கடைவீதியில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 4 முனை சந்திப்பில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாாி ஒன்று திருமலை ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் காமாட்சி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த திருமலையை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்