பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.;

Update:2022-06-01 02:47 IST

தலைவாசல்

கெங்கவல்லி தாலுகா தெடாவூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன். இவருடைய மனைவி வள்ளி (வயது 38). இவர் தலைவாசல் அருகே உள்ள கிழக்கு ராஜாபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் நேற்று விவசாய வேலைக்கு சென்றார். அங்கு விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவரை பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து வள்ளி உடனடியாக கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கெங்கவல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்