குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-26 18:05 GMT

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள சுந்தரேசபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ்(வயது 28). கூலி தொழிலாளி. இவரது மனைவி விமலா(26). இவர்கள் இருவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் விமலாவிற்கு குழந்தை இல்லை. இதுகுறித்து அவர் தனது கணவரிடம் கூறி அடிக்கடி வருத்தம் அடைந்ததாகவும், இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை பவுன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லாதநிலையில் விமலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பவுன்ராஜ் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்