குடும்ப தகராறில் பெண் வெட்டிக்கொலை

அருப்புக்கோட்டை அருகே குடும் ப தகராறில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-11-13 00:36 IST

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே குடும் ப தகராறில் பெண்ணை வெட்டிக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

அரிவாள் வெட்டு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆமணக்குநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 62). இவரது மனைவி ராமுத்தாய் (59). குடும்ப பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ராமுத்தாய் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

எனினும் அய்யனார் அடிக்கடி தனது மனைவியுடன் பிரச்சினை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அய்யனார் நேற்று மாலை ராமுத்தாய் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமுத்தாயின் தலையில் வெட்டினார். இதில் ராமுத்தாய் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

கணவன் கைது

உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராமுத்தாய் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பந்தல்குடி போலீசார், அங்கு பதுங்கியிருந்த அய்யனாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்