பெண் வெட்டிக் கொலை

சேரன்மாதேவியில் நேற்று இரவில் பெண் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-08-24 20:23 GMT

சேரன்மாதேவியில் நேற்று இரவில் பெண் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வெட்டிக் கொலை

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 56).

இவர் நேற்று இரவு தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ்ராஜன், கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தீவிர விசாரணை

மாரியம்மாள் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையாளி எந்த வழியாக தப்பிச் சென்றான்? என்பது குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நள்ளிரவில் பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்