பாம்பு கடித்து பெண் சாவு

பாம்பு கடித்து பெண் இறந்தாா்

Update: 2023-10-19 21:57 GMT

சிவகிரி அருகே உள்ள காரவலசு என்ற ஊரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 44). அவருடைய மனைவி சித்ரா (42). கூலி தொழிலாளிகள். இந்த நிலையில் சித்ரா காரவலசில் உள்ள விவசாயி ஒருவரின் கரும்பு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது அங்கு ஊர்ந்து வந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சித்ராவை கடித்துவிட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சித்ரா வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்