ெமாபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி
மருமகளுடன் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலியானார்.;
காவேரிப்பட்டணம்:-
மருமகளுடன் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலியானார்.
மாமியார்- மருமகள்
காவேரிப்பட்டணம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டியை சேர்ந்தவர் சோலை பட்டம்மாள் (வயது 70). இவருடைய மருமகள் காஞ்சனா (26). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் வெளியூர் சென்று விட்டு மீண்டும் மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
மோட்டார்சைக்கிளை காஞ்சனா ஓட்டினார். வேலம்பட்டி அருகே வந்த போது சோைல பட்டம்மாளின் சேலை மொபட்டின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய மொபட் சாலையில் கவிழ்ந்தது. இதில் மாமியார்- மருமகள் இருவரும் கீழே விழுந்தனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சோலை பட்டம்மாளை மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சோலை பட்டம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.